Latestமலேசியா

வீட்டின் கூரைமேல் மயங்கி விழுந்த ஆடவர்

ஈப்போ, மார்ச் 2 – தமது வீட்டின் கூரையில் பழுது பார்த்துக்கொண்டிருந்த
89 வயதுடைய முதியவர் ஒருவர் மயங்கி விழுந்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

ஈப்போவில் Kampung Baru, Ampang Bharu வில் உள்ள தமது வீட்டின் கூரைப் பகுதியில் துவாரம் இருந்ததால் அதனை பழுதுபார்க்கும் பணியில் NG Shui Yoong என்ற அந்த முதியவர் நேற்று மாலை மணி 3 அளவில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டதால் வீட்டின் கூரைமேல் விழுந்துவிட்டார்.

உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வருகை புரிந்து இயந்திர ஏணியை பயன்படுத்தி தூக்குப் படுக்கை மூலம் கூரையிலிருந்து அவரைது உடலை கீழே இறக்கினர்.

அதன் பின்னர் அந்த முதியவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார் என ஈப்போ தீயணைப்பு நிலையத்தின் அதிகாரி Mahmud Azaddin வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!