குவாலா பிலா, செப்டம்பர்-6 – நெகிரி செம்பிலான், குவாலா பிலா, பத்து கிக்கிரில் வீட்டின் சிலிங் கூரையிலிருந்து 15 கிலோ கிராம் எடைகொண்ட மலைம்பாம்பு வந்து விழுந்ததால், மூவர் கொண்ட குடும்பம் அதிர்ச்சியில் உறைந்து போனது.
பாடாங் லேபார் மக்கள் வீடமைப்புத் திட்டத்தில் வசித்து வரும் அக்குடும்பத்திடமிருந்து நேற்று காலை 9.50 மணியளவில் பொது தற்காப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து 3 பேரடங்கிய குழு மலைப்பாம்பைப் பிடிக்க உடனடியாக அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் வீட்டை அடைந்த போது மலைம்பாப்பு குளியறையில் மறைந்திருந்தது.
அது தப்பிக்காமலிருக்க வீட்டார் குளியலறை கதவை மூடி வைத்திருந்தனர்.
பிறகு, குளியறையில் முகம் பார்க்கும் சுவர் கண்ணாடியின் பின்னால் ஒளிந்திருந்த மலைபாம்பை அக்குழு ஒருவழியாகக் பிடித்துச் சென்றது.
பிடிபட்ட மலைப்பாம்பு வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னிடம் ஒப்படைக்கப்பட்டது.