சுங்கை பட்டாணி, பிப் 23 – அதிகாலை மணி நான்களவில் , வீட்டின் முன் வியாபாரி ஒருவர் கொள்ளையடிக்கப்பட்டதோடு, கால்களில் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டன.
அந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை சுங்கை பட்டாணி, தாமான் செருலிங் ( Taman Seruling) பகுதியில் நிகழ்ந்ததாக, குவாலா மூடா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் (Anuar Abd Rahman) தெரிவித்தார்.
சம்பவத்தின் போது,50-வது வயது மதிக்கத்தக்க ஆடவர், 100 மீட்டர் தூரத்திலிருக்கும் கடையிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அந்த நபர் வீட்டை அடைந்து, கதவை திறக்க முற்பட்டபோது , மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆடவர்கள், அவரை காலில் பாராங்கத்தியால் வெட்டி, கைபேசியைத் திருடிச் சென்றதாக அனுவார் அப்துல் ரஹ்மான் கூறினார்.
அந்த சம்பவம் தொடர்பில், இருவர் கைது செய்யப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.