Latestமலேசியா

‘ஏர்பேக் பிரச்சனை’, 6,671 கார்களை திரும்பப் பெறுகிறது Volkswagen மலேசியா

புத்ரா ஜெயா, டிச 27 – வோல்க்ஸ்வேகன் (Volkswagen) கார்ஸ் மலேசியா நிறுவனம், VPCM, தனது “Golf GTI”, “Eos”, “Passat CC”, “Polo”, “Beetle” மற்றும் “Vento” என மொத்தம் 6 வகை கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

2010 மற்றும் 2014க்கு இடையில் தயாரிக்கப்பட்ட அந்த 6 வகை கார்களும் ஆய்வுக்காக திரும்பப் பெறப்படுகிறது என்று அது கூறியுள்ளது. இதனிடையே சுமார் 6,671 கார்கள் திரும்ப பெறப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!