லண்டன், பிப் 23 – லண்டனில் உள்ள வீட்டில் ஒரு பெண்ணின் சடலம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அழுகிய நிலையில் இருந்ததை போலீசார் கண்டுப் பிடித்தனர்.
அந்த வீட்டிலிருந்து கெட்டுப்போன இறைச்சியின் துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டுக்காரர்கள் 50 க்கும் மேற்பட்ட தடவை புகார் தெரிவித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 61 வயதுடைய Sheila Seleoane என்பவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
அந்த சடலம் இருந்த அடுக்கு மாடி வீட்டில் ஜன்னல் வழியாக புழுவுகள் அவ்வீட்டிற்குள் ஊர்ந்து செல்வதையும் பார்க்க முடிந்ததாக அண்டை வீட்டுக்காரர்கள் புகார் செய்தனர்.
எனினும் அருகேயுள்ள கால்வாயிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக மட்டுமே அதிகாரிகள் கூறினார்களே தவிர எவரும் அவ்வீட்டிற்குள் நுழைந்து பரிசோதிக்கவில்லை.
இறுதியாக அந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோதுதான் Sheila Seleoane சோபா நாற்காலியில் இறந்து கிடந்ததை கண்டனர்.