Latestமலேசியா

வீட்டிற்குள் புகுந்து அரசு பணியாளர் கற்பழித்ததை ஆடவன் ஒப்புக்கொண்டான்

ஈப்போ, ஏப் 29 – அரசு பணியாளரின் வீட்டிற்குள் கடந்த வாரம் நுழைந்து அவரை கற்பழித்தது உட்பட கட்டுமான தொழிலாளி ஒருவர் மீது ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. நீதிபதி Ainul Shahrin Mohamad முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை 43 வயதுடைய Hassan Ahmad ஒப்புக்கொண்டார். 38 வயதுடைய பெண்ணை கற்பழித்ததோடு அவருக்கு மரணம் ஏற்படுத்தப்போவதாக அந்த ஆடவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை மணி 1.47 வரை சுங்கத்துறை குடியிருப்பு பகுதியில் இக்குற்றதை புரிந்துதாக அந்த ஆடவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த ஆடவனுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. எதிர்வரும் மே 22 ஆம் தேதி அவனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி Ainul Shahrin Mohamad தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!