
கூச்சிங், ஜன 11 – கூச்சிங்கில் , Kampung Hilir Tabuan-னில் ஒரு வீட்டிற்கு அடியில் முதலை பதுங்கியிருந்தது கண்டு அந்த கிராம மக்கள் பரபரப்பு அடைந்தனர். 2.5 மீட்டர் நீளம் கொண்ட அந்த முதலையை பிடிப்பதற்காக கிராம மக்கள் தீயணைப்பு படை வீரர்களின் உதவியை நாடினர். இதனை தொடர்ந்து Tabuan Jaya தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து தீயணைப்பு வீரர்கள் அந்த முதலையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 40 நிமிட நேர போராட்டத்திற்குப் பின் அவர்கள் அந்த முதலையைப் பிடித்தனர்.