Latestமலேசியா

வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல்; பள்ளிகளுக்கு தேர்வு வழங்கப்பட்டுள்ளது

கூலாய், பிப் 23 – கோவிட் தொற்று எண்ணிக்கை உயர்வாக இருக்கும் பட்சத்தில் , ஆரம்ப –இடைநிலைப் பள்ளிக்கூடங்கள் , வீட்டிலிருந்து மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ள தேர்வு வழங்கப்பட்டுள்ளதாக, கல்வியமைச்சு தெரிவித்தது.

தற்போதைக்கு கல்வியமைச்சு , SPM, STPM தேர்வுக்கு அமரவிருக்கும் மாணவர்களின் போதனா நவடிக்கையில் கவனம் செலுத்தி வருவதாக, கல்வி துணையமைச்சர் டத்தோ மொஹமட் அலாமின் தெரிவித்தார்.

இந்நிலையில், கோவிட் தொற்று அதிகரிப்பை எதிர்கொள்ள பள்ளிகளுக்கு SOP – விதிமுறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. எனினும், வீட்டில் இருந்து கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள விரும்பும் பள்ளிகள் அதற்கு விண்ணப்பிக்கலாம் என துணையமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!