Latestமலேசியாவிளையாட்டு

OUM பல்கலைக்கழகம் வழங்கியுள்ள உபகாரச் சம்பள வாய்ப்பு சரியான நேரத்தில் வழங்கப்பட்ட வெகுமதி – பேட்மிண்டன் வீராங்கனை எம்.தீனா

கோலாலம்பூர், பிப் 29 – அடுத்த வாரம்  பிரான்ஸ் பொது விருது பேட்மிண்டன் போட்டியில்  கலந்துகொள்ளவிருக்கும் தமக்கு  OUM  பல்கலைக்கழகம் வழங்கியிருக்கும் உயர்க்கல்விக்கான உபகாரச் சம்பளம்  சரியான நேரத்தில் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வெகுமதியாகும் என  தேசிய இரட்டையர் பேட்மிண்டன் வீராங்கனையான   M. Thinnah  தெரிவித்திருக்கிறார். இரண்டாவது மொழியாக  ஆங்கில பாடத்தை போதிக்கும் துறையில்  இளங்கலை    பட்டப்படிப்பை    கடந்த  2020ஆம் ஆண்டு மே மாதம் முதல்   Thinaah  மேற்கொண்டு வருகிறார்.  பிரான்ஸ் பொது விருது பேட்மிண்டன் போட்டியில்    மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வாகைசூட வேண்டும் என்ற இலக்கை  தாம் கொண்டிருப்பதால்  அதற்கு நல்லதொரு  உற்சாகத்தை  OUM பல்கலைக்கழகத்தின்  உபகாரச் சம்பள வாய்பு    தந்துள்ளதாக  அவர் கூறினார்.  

இப்போட்டிக்காக  தாமும்  சக ஆட்டக்காரரான Pearly Tan னும்  சிறந்த முறையில் தயாராகிவருகிறோம் என  உலகின்  15ஆம் நிலை ஆடடக்காரராக  கணிக்கப்பட்டுள்ள  Thinnah    தெரிவித்தார்.  2022 ஆம் ஆண்டு நடைபெற்ற  பிரான்ஸ் பொது விருது பேட்மிண்டன் போட்டியில்  Thina – Pearly Tan  ஜோடி  ஜப்பானின்  Mayu  Matsumoto-Wakana Nagahara  ஜோடியை  வீழ்த்தி வெற்றி பெற்றனர்.  இதன்வழி பிரான்ஸ் பொது பேட்மிண்டன் போட்டியில்   மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்ற முதல் மலேசிய வீரங்கனைகள் என்ற முத்திரையை  அவர்கள் பதித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!