
நெகிரி செம்பிலான், ஜெலுபுவிலுள்ள, வீடொன்றில், திருடுவதற்காக அத்துமீறி நுழைந்து, மது போதையில் உறங்கிப் போன ஆடவனுக்கு எதிராக இன்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், 41 வயது பி.ராமன் எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினான்.
இம்மாதம் 23-ஆம் தேதி, அதிகாலை மணி 6.30 வாக்கில், அச்சம்பவம் நிகழ்ந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, ஐயாயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
தனிநபர் உத்தரவாதத்திலும், 16 ஆயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலுள்ள இன்று அவன் விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.