Latestமலேசியா

வீட்டில் கணவன்- மனைவி இறந்து கிடந்தனர்

கோலாலம்பூர், செப் 10- Seremban ,  லுக்குட், Bandar Dataran Segar-ரில்  உள்ள ஒரு வீட்டில்  கணவன் – மனைவி இறந்து கிடந்தனர்.  61 வயது ஆடவரும், அவரது  58 வயது மனைவியும் அவ்வீட்டில் இறந்து கிடந்தது குறித்த தகவலை பொதுமக்களிடமிருந்து போலீஸ் பெற்றதாக  போர்ட்டிக்சன்  மாவட்ட போலீஸ் தலைவர் Aidi Shan Mohamed  தெரிவித்தார்.  தீயணைப்பு மற்றும்  மீட்பு குழுவினரின் உதவியோடு அவ்வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து  போலீசார்  சோதனை நடத்தியதாக அவர்  கூறினார்.  அந்த தம்பதியர் அவ்வீட்டிலேயே மரணம் அடைந்ததை  லுக்குட் சுகாதார கிளினிக்கின்  மருத்துவ அதிகாரியும் உறுதிப்படுத்தினார்.  மரணம் அடைந்த ஆடவருக்கு   உயர் ரத்த அழுத்தம்  ஏற்கனவே இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால் அவரது மனைவி நல்ல ஆரோக்கியத்தோடு இருந்துள்ளார் என  அந்த மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.  அந்த வீட்டில்  குற்றச் செயல் எதுவும் நடந்ததற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லையென   போலீசார் உறுதிப்படுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!