
மெட்ரிட், மே 2 – 40 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்த வீடு ஒன்றை வாங்கி புதுப்பிக்க முயன்போது அங்குள்ள பழைய டின்களில் 47,000 Pound Sterling அதாவது 2 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பணம் இருந்ததைக் கண்டு Spain நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.
அந்த வீட்டின் சுவரில் வைக்கப்பட்டிருந்து ஆறு இரும்புப் பெட்டியில் அந்த பணம் இருந்தது. எனினும் அதில் இருந்த Spain பண நோட்டுக்களை இப்போது பயன்பாட்டில் இல்லாததால் அந்த ஆடவரின் மகிழச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை.
தற்போது Spain – னில் Euro நாணயம் பயன்படுத்தப்படுவதால் அந்நாட்டின் பழைய நாணயம் அங்கு பயன்படுத்தப்படுவதில்லை. அந்த பண நோட்டுக்கள் மிகவும் பழமையாகிவிட்டன.
பழைய பண நோட்டுக்களை மாற்றிக்கொள்வதற்கு Spain Bank வழங்கிய கால அவகாசமும் முடிந்துவிட்டன. எனினும் 30,000 Pound Sterling மதிப்புள்ள அதாவது 1 லட்சத்து 67 ஆயிரம் ரிங்கிட்டை அந்த ஆடவரால் பெறமுடிந்திருக்கிறது