லண்டண், ஆகஸ்ட் 19 – பிரிட்டனில் பெண் ஒருவர், தனது வீட்டின் சி.சி.டி.வியில், கொரில்லா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவரின் X தளத்தில், பதிவேற்றப்பட்ட அந்த சி.சி.டி.வியின் காட்சிகளில், கொரில்லா ஒன்று அவர் வீட்டின் அறையில் இருப்பதைக் காணமுடிகிறது.
வீட்டினுள் பெரிய கொரில்லாவின் தோற்றத்தைப் பார்த்துப் பீதியடைந்த Maddy எனும் அந்த பெண், விரைந்து தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அந்த விலங்கு எங்கே என்று கண்டுபிடிக்க வீட்டிற்குள் விரைந்தவருக்குக், காத்திருந்தது என்னவோ அவரின் மகனின் கொரில்லா பொம்மைதான்.
சி.சி.டி.வி அருகில் கிடந்த தனது மகனின் கொரில்லா பொம்மைதான், அந்த ‘கொடுமையான விலங்கு’ என்பதைக் கண்டறிந்ததும் நான் பெருமூச்சு விட்டேன் என்று அவரின் பதிவின் கீழ் பதிவிட்டுள்ளார்.
இதுவரை, 32.7 மில்லியன் பேர் பார்வையிட்ட அவரின் காணொளியின் கீழ், இப்படியும் எதிர்பாரச் சம்பவங்கள் சிரிப்பை வரவழைக்கிறது என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.