பாட்னா, மார்ச் 4 – இந்தியாவில் பீகார் மாநிலத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது எழுவர் மாண்டனர். அதோடு மேலும் பலர் அந்த வெடிப்புச் சம்பவத்தில் காயம் அடைந்தனர். அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்தமாக பட்டாசு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வெடி விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த சம்பவத்தில் இரண்டு மூன்று அண்டை வீடுகளிலும் வீடுகளிலும் தீப்பற்றியதாக கூறப்பட்டது.
Related Articles
Check Also
Close