
சிங்கப்பூர், ஜன 28 – வீட்டில் பீர் குடித்ததால், தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையின் தலையில் சுத்தியலைக் கொண்டு மூன்றிலிருந்து நான்கு முறை பலமாக தொடர்ந்து அடித்திருக்கின்றார் 28 வயதான சிவதர்ஷ்ணி கருணாநிதி.
நேற்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தெரிந்தே 53 வயதான தனது தந்தைக்கு காயத்தை விளைவித்ததாக, அவர் ஒப்புக் கொண்டார்.
தனது மேற்கல்வியை முடித்து, வேலை தேடிக் கொண்டிருக்கும் சிவதர்ஷ்ணி, பீர் குடித்து விட்டு, தனது தந்தை கண்ட இடத்தில் சிறுநீர் கழிக்கக் கூடுமென்ற ஆத்திரத்தால் அவரை அடித்து காயப்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது .
இதனிடையே, வலியால் தூக்கத்திலிருந்து அலறி கொண்டு எழுந்த சிவதர்ஷ்ணியின் தந்தை பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரின் மண்டை ஓட்டில் பிளவு ஏற்பட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் நிகழ்ந்தது.