கோலாலம்பூர், பிப் 6 – 10,000 இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்களை நாட்டிற்குள் தருவிப்பதற்கான கருத்திணக்க உடன்பாடு கையெழுத்திடப்படுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த கருத்திணக்க உடன்பாட்டில் பிப்ரவரி 7, 8-ஆம் தேதிகளில் கையெழுத்திட திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த முன்னோட்டி திட்டம் தொடர்பில் முக்கிய விவகாரங்ளில் தீர்வு காணப்பட்டுள்ளது. அதையடுத்து இம்மாதத்திற்குள் அதன் தொடர்பான கருத்திணக்க உடன்பாடு கையெழுத்தாகுமென மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவும் இந்தோனேசியாவும் ‘ஒரு வீடு ஒரு பணிப்பெண்’ முறைக்கும், வீட்டுப் பணிப்பெண்களைத் தருவிப்பதற்கான ஒரே முறை, சம்பளம் ஆகிய விவகாரங்களில் இணக்கம் கண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில், நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான தேவை அதிகமுள்ளதை அடுத்து , இம்மாதத்திற்குள் அதற்கான கருத்திணக்க உடன்பாடு காண்பதை தமது தரப்பு பெரிதும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு வீடு ஒரு பணிப்பெண் திட்டத்தின் கீழ், 6 பேருக்கும் மேற்போகாத வீட்டில் ஒரு இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு அமர்த்தப்படுவார்.