வாஷிங்டன், பிப் 9 – வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்க துணையதிபர் Kamala Harris சின் கணவர் Doug Emhoff தாம் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். வாஷிங்டனிலுள்ள Dunbar உயர்நிலைப் பள்ளியில் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாறு நிகழ்வில் Doug Emhoff கலந்துகொண்டபோது வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட இதர பொதுமக்களும் வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் எப்படி விடுக்கப்பட்டது, யார் அந்த எச்சரிக்கையை விடுத்தது போன்ற விவரங்கள் எதனையும் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிடவில்லை.
Related Articles
Check Also
Close