
ஜொகூர் பாரு, ஜாலான் அப்துல் சாமாட்டிலுள்ள, உணகவத்தில், வெடிகுண்டை வீசியதாக நம்பப்படும் ஆடவனை போலீஸ் தேடி வருகிறது.
நேற்று மாலை மணி 4.15 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பான காணொளி வைரலானதை அடுத்து அவன் தேடப்படுவதாக, ஜொகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ராவுப் செலாமாட் தெரிவித்தார்.
அச்சம்பவம் குறித்து, மாலை மணி 5.27 வாக்கில் போலீஸ் புகார் செய்யப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
பேரிரைச்சல் காரணமாக தமது உணவகத்தின் கண்ணாடிகள் உடைந்து நொருங்கியதாக, அந்த 35 வயது நபர் தமது புகாரில் குறிபிட்டுள்ளதாகவும், ராவுப் செலாமாட் சொன்னார்.
சாம்பல் நிற கார் ஒன்று கடையின் முன்புறம் நிற்பதை அடுத்து, காரில் இருந்து இறங்கு அடவன் வெடிகுண்டு என நம்பப்படும் பொருள் ஒன்றை கடையை நோக்கி வீசும் காட்சிகள், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்சிருக்கும் CCTV ரகசிய கண்காணிப்பு பதிவு வாயிலாக தெரிய வந்துள்ளது.
முன்னதாக, அச்சம்பவம் தொடர்பான இரு காணொளிகள் வைரலானது குறிப்பிடத்தக்கது.