
புதுடில்லி, ஜன 10 – ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 244 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் இந்தியாவின் பிரபல சுற்றுலா மையமான கோவாவுக்கு புறப்பட்ட ரஷ்ய விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததைத் தொடரந்து குஜராத்தின் Jamnagar விமான நிலையத்தில் அந்த விமானம் நேற்றிவு அவரசமாக தரையிறக்கப்ட்டது. அதனைத் தொடர்ந்து விமான பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக அந்த விமானத்திலிருந்து தரையிறங்கினர். பிறகு வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயல் இழக்கப் படையுடன் இணைந்து விமானத்தை சோதனை செய்யும் பணியில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர். எனினும் அந்த விமானத்தில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கோவா விமான நிலைய கட்டுப்பாட்டு கோபுரத்திற்கு தகவல் கொடுத்தவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக குஜராத் போலீஸ் தலைவர் Ashok Yadav கூறினார்.