அலோஸ்டார், பிப் 17 – அலோஸ்டாரில் Jalan Simpang Kuala விலுள்ள பழைய திரையரங்கு கட்டிடத்தில் வெட்டப்பட்டு எரியூட்டப்பட்ட ஆடவர் கரும்புகையை சுவாசித்ததால் மரணம் அடைந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
இறந்தவரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட சவ பரிசோதனை அறிக்கையில் இது தெரிய வந்ததாக Kota Setar மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Ahmad Shukri Mat Akhir தெரிவித்தார்.
எனினும் இதுவரை இறந்தவரைப் பற்றிய அடையாளம் எதுவும் இன்னும் கண்டறியப்படவிலையென அவர் கூறினார். அந்த கட்டிடத்தின் மேல் மாடியில் தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு ஒருவரின் உடல் இருந்ததை கண்டுப்பிடித்தனர்.
இது தொடர்பாக சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 59 வயதுடை ஆடவர் கைது செய்யப்பட்டார். அதன் பின் ஒரு பெண் உட்பட மேலும மூவர் கைது செய்யப்பட்டதையும் Ahmad Shukri தெரிவித்தார்.