
பெருநாள் காலத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உணவு பொருட்களின் விலையை அநியாயத்திற்கு உயர்த்துவதை தவிர்க்குமாறு போர்ட் டிக்சன் வியாபாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, அங்குள்ள வணிகர்கள் சிலர் வெதுவெதுப்பான குடிநீருக்கு இரண்டு ரிங்கிட்டை கட்டணமாக விதித்த செயல் ஏற்புடையது அல்ல என மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் சாரி குறிப்பிட்டார்.
முன்னதாக, வெதுவெதுப்பான குடிநீருக்கு இரண்டு ரிங்கிட் கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், போர்ட் டிக்சன் நகராண்மைக் கழகம் புகார் ஒன்றை பெற்றது.
அந்த புகாரை அடுத்து, சம்பந்தப்பட்ட வணிகரின் வியாபார அனுமதியை போர்ட் டிக்சன் நகராண்மைக் கழகம் புதுப்பிக்காது என கூறப்படுகிறது.