
வெப்ப காலத்தில், மாணவர்களும், ஆசிரியர்களும், சாதாரண வீட்டு உடைகள் அல்லது விளையாட்டு உடைகளை அணிந்து பள்ளிக்கு செல்ல, கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரின் நலனை கருத்தில் கொண்டு அந்த தளர்வு வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
கடுமையான வெயில் காலத்தில், வெப்பம் சார்ந்த உடல் உபாதைகளுடன், மனநல பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.
அதனால், பள்ளிகளில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பணிக்கப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.