Latestமலேசியா

வெப்ப நிலை 40 செல்சியஸுக்கும் அதிகம்; கவனமாக இருக்கும்படி மலேசியர்களுக்கு வலியுறுத்து

கோலாலம்பூர், மே 9 – அண்மையில் நாட்டின் வெப்பநிலை 40 செல்சியஸ் டிகிரிவரை அதிகரித்ததைத் தொடர்ந்து மக்கள் எப்போதும் கவனமாக அல்லது விழிப்பாக இருக்க வேண்டும் என இயற்கை வளம், சுற்றுக் சூழல் அமைச்சர் Nik Nazmi Nik Ahmad ஆலோசனை தெரிவித்திருக்கிறார். கிளந்தானில் நான்கு இடங்களில் இரண்டவாது வெப்ப நிலை அளவு தினசரி 37 செல்சியஸ் டிகிரி முதல் 40 செல்சியஸ் டிகிரியாக தொடர்ந்து மூன்று நாட்கள் இருந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாண்டு தொடக்கத்தில் அதிகமான வெப்ப நிலை காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் Pahang கில் 22 வயது ஆடவர் ஒருவரும், கடந்த மாதம் கிளந்தானில் மூன்று வயது குழந்தையும் இறந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடுமையாக வெப்ப நிலை மற்றும் வறட்சியை நாடு எதிர்நோக்குவதை தயாராகுவதற்கு விரைவில் புகை மூட்டம் மற்றும் தேசிய வறட்சி சீதோஷ்ண நிலை மீதான முக்கிய கூட்டத்தை நடத்தும்படி தாம் கேட்டுக்கொண்டிருப்பதாக Nik Nazmi வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
பொதுமக்கள் திறந்த வெளியில் குப்பைகளை எரித்து காற்றின் தரத்தை மேலும் மோசமாக்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார். 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு மலேசியா இவ்வாண்டு அதிக வெப்ப அளவை எதிர்நோக்கி Nik Nazmi தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!