
சிபு , மே 8 – வெப்ப பக்கவாதம் தொடர்பில் சரவா காட்டுவளத்துறையின் 52 வயதுடைய பராமரிப்பு தொழிலாளர் ஒருவர் மரணம் அடைந்தார். ஜாலான்
Paradom னில் உள்ள காட்டுப் பகுதியில் மாலை மணி 3.15 அளவில் சிவில் தற்காப்பு படையிடமிருந்து போலீஸ் இத்தகவலை பெற்றதாக சிபு ஓ.சி.பி.டி துணை கமிஷனர் zulkipli Suhaili தெரிவித்தார். அந்த சம்பவத்திற்கு முன் மின் துணை நிலையத்தில் அந்த ஆடவர் சக தொழிலாளிகளுடன் சேர்ந்து சில பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீதோஷ்ண நிலை மிகவும் உஷ்ணமாக இருந்ததால் Mohamad Sabeli என்று அடையாளம் கூறப்பட்ட அந்த ஆடவர் அருகேயுள்ள ஒரு நீரோடைக்குச் சென்று அமர்ந்த அவர் அங்கேயே இறந்துவிட்டார். அதற்கு முன்னதாக தாமும் Mohamad Sabeli யும் 30 மீட்டர் உயரத்திலுள்ள கோபுரத்தில் ஏறி பறவைவளின் எச்சத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டதாகவும் அப்போது சீதோஷ்ன நிலை மிகவும் உஷ்ணமாக இருந்ததாக Hishamuddin Abdul Rani என்ற மற்றொரு தொழிலாளி தெரிவித்தார்.