
கோலாலம்பூர், மே 26- தீபகற்ப மலைசியாவில் நான்கு பகுதிகளிலும் சரவாக்கில் ஒரு பகுதியிலும் நேற்று முதல் நிலை வெப்ப வானிலை நிலையை (முன்னெச்சரிக்கை) மலேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.
வானிலை ஆய்வுத் துறை தனது பேஸ்புக் பதிவில் நேற்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி தீபகற்ப மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தின் பாசிர் மாஸ், கோல கிராய், பகாங்கில் உள்ள ரவுப் மற்றும் பெந்தோங் ஆகிய பகுதிகளில் இந்த வெப்ப வானிலை பதிவாகியுள்ளது.
சரவாக்கில் முதல் கட்ட வெப்ப நிலையில் இருக்கும் பகுதியாக செலாங்காவ் விளங்குகிறது. முன்னெச்சரிக்கை நிலை என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு நீடிக்கக்கூடிய 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்ப நிலையைக் குறிக்கும்.