Latestமலேசியா

பஹாவ்வில், ஐபோனை திருடிக் கொண்டு கம்பி நீட்டிய ஆடவன்; போலீஸ் வலைவீச்சு

ஜெம்போல், டிசம்பர் 27 – நெகிரி செம்பிலான், பஹாவ்வில், தொலைத் தொடர்பு சாதனங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றிலிருந்து, பயன்படுத்தப்பட்ட ஐபோன் 11 Pro Max 256GB ரக கைப்பேசியை திருடிக் கொண்டு கம்பி நீண்டிய ஆடவன் ஒருவனை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்.

கடைக்கு வந்து கைபேசி வாங்குவதை போல பாசாங்கு செய்த அவனிடம், கடையில் தனியாக இருந்த பணியாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட ஐபோனை கொடுத்துள்ளார்.

எனினும், அதனை எடுத்துக் கொண்டு அவன் கம்பி நீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஹோ சாங் ஹொக் தெரிவித்தார்.

அச்சம்பவம், கடையில் இருந்த CCTV இரகசிய கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.

அதன் அடிப்படையில், 20 முதல் 25 வயதுக்கு உட்பட்ட, 165 செண்டிமீட்டர் உயரமும், ஒல்லியான உடல்வாகும் உடைய அவ்வாடவனை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அவ்வாடவன் திருடிச் சென்ற ஐபோன், தம்பின், கெமாசிலுள்ள கடை ஒன்றில் விற்கப்பட்டது தெரிய வந்துள்ளதாக ஹோ சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!