
இஸ்கண்டார் புத்ரி, செப்டம்பர் 8 – நுசா பெஸ்டாரிலுள்ள, ஸ்டார்பக்ஸ் கடையின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்களுக்கு, ஏமாற்றம் மட்டுமே காத்திருந்தது.
கடையில் இருந்த வெறும் பத்து ரிங்கிட்டுடன் அவர்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
எனினும், கண்ணாடி கதவை உடைத்து அவர்கள் உள்ளே நுழைந்ததால், அந்த கடையின் நிர்வாகத்திற்கு , மூவாயிரத்து 500 ரிங்கிட் வரையில் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதிகாலை மணி நான்கு வாக்கில், மேற்கொள்ளப்பட்ட அந்த கொள்ளை சம்பவம் குறித்து, கடையின் 23 வயது பணியாளர் ஒருவர் போலீஸ் புகார் செய்ததை, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஸ்னர் ராஹ்மாட் அரிப்பின் உறுதிப்படுத்தினார்.
கொள்ளையர்களின் அடையாளத்தைக் கண்டறிய, சம்பந்தப்பட்ட ஸ்டார்பக்ஸ் கடையில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
எனினும், அந்த கொள்ளை சம்பவத்தின் போது, அசம்பாவிதம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.