கோலாலம்பூர், ஏப் 14 – கோலாலம்பூரில் செயல்பட்டு வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த 8 ஜேப்படி திருடர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஜாலான் அம்பாங்கில் 37,000 மதிப்புள்ள பொருட்களை வாங்கியபோது அவர்களை போலீசார் கைது செய்தனர்.
22 மற்றும் 38 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகளை Dang Wangi குற்றவியல் விசாரணைத்துறையின் போலீஸ் குழு கைது செய்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Noor Dellhan Yahaya தெரிவித்தார். அவர்களிடமிருந்து ஐந்து நவீன கை தொலைபேசிகள் , துணிகள், பொருட்களை வாங்கியதற்கான ரசீதுகளுடன் மற்றும் 8 கிரெடிட் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.