
புத்ராஜெயா, மார்ச்-26,
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு புதிதாக விசா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மலேசியர்களுக்கு 8 நாடுகள் புதிய விசா கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ ஒன்றில் வெளியான தகவலை மறுத்து பேசுகையில், அமைச்சு அதனைத் தெளிவுப்படுத்தியது.
அவ்வீடியோவில் கூறப்பட்ட நாடுகளில் மலேசியர்களைப் பாதிக்கும் வகையிலான விசா கொள்கை மாற்றம் எதுவுமில்லை.
எனவே பொய்யான தகவல்களைப் பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியன் பேரில், அவ்வீடியோ குறித்து மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC-யிடம் விஸ்மா புத்ரா புகாரளித்துள்ளது.
இது போன்ற வீடியோக்களின் நம்பகத்தன்மையை உறுதிச் செய்யாமல், பொது மக்களும் அவற்றைப் பகிருவதைத் தவிர்க்க வேண்டும்.
மலேசியர்களுக்கு சரியான தகவல்கள் கிடைப்பதையும் வெளிநாடுகளில் இருக்கும் போது அவர்கள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிச் செய்யும் கடப்பாட்டை விஸ்மா புத்ரா மறுஉறுதிப்படுத்தியது