Latestமலேசியா

வெளிநாட்டவரிடம் 260,000 ரிங்கிட் கொள்ளை 5 போலீஸ்காரர்கள் உட்பட 7 பேர் கைது

கோலாலம்பூர், ஏப் 9 – வெளிநாட்டவர் ஒருவரின் கைக்கடிகாரம் மற்றும் 260,000 ரிங்கிட் ரொக்கத்தை கொள்ளையிட்டது தொடர்பில் 5 போலீஸ்காரர்கள் உட்பட எழுவர் கைது செய்யப்பட்டனர். இதர இரண்டு சந்தேக நபர்களும் முன்னாள் போலீஸ்காரர் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கியவர்கள். சந்தேகநபர்கள் ஏழு பேரும் 28 மற்றும் 41 வயதுடையவர்கள் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Rusdi Isa தெரிவித்தார். பணத்தை இழந்தவர் தாக்கப்படவில்லை.
ஏப்ரல் 7 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு மூவரை போலீஸ் குழுவினர் வெற்றிகரமாக கைது செய்ததன் மூலம் அக்கொள்ளையில் சம்பந்தப்பட்ட நால்வர் எளிதாக கைது செய்ய முடிந்ததாக அவர் கூறினார்.

ஏப்ரல் 11 ஆம் தேதிவரை ஐந்து சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதர இருவர் ஏப்ரல் 12ஆம்தேதிவரை தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என இன்று வெளியிட்ட அறிக்கையில் Rusdi isa தெரிவித்தார். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து இன்னமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுவர்கள் தமது அதிகாரிகளாக இருந்தாலும் எவரும் தற்காக்கப்படமாட்டார்கள் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!