
பங்கோக், ஜன 8 – தாய்லாந்து தனது நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்கான கோவிட் கட்டுப்பாடுகளை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது.
பெரியவர்கள் தாங்கள் இரு கோவிட் -19 தடுப்பூசிகளைப் போட்டிருப்பதை ஆதாரமாகக் காண்பிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அதற்கான மருத்துவ காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் அல்லது ஜூலைக்குப் பிறகு கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்திருக்க வேண்டுமென அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
இன்று ஜனவரி 8 முதல் சீனா தனது அனைத்துலக எல்லையைத் திறந்திருப்பதின் வாயிலாக, கோவிட் மீண்டும் பரவக் கூடும் எனும் அச்சத்தில் சீனா, ஹங்காங், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து முதலிய நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கு நுழைவுக்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது தாய்லாந்தும் அதில் இணைந்துள்ளது.
இவ்வாண்டு முதல் காலாண்டில், 3 லட்சம் சீன சுற்றுப் பயணிகள் தாய்லாந்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.