
கோலாலம்பூர், ஜன 4 – வெளிநாடுகளில் கோவிட் -19 தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அடுத்து, நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் மீதான சுகாதார பரிசோதனை கடுமையாக்கப்படுமென , பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். பயணிகள் மீது எந்தவொரு பாரபட்சமின்றி அந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் மக்களின் சுகாதார பாதுகாப்புக்கிற்கே அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கும். அதற்கடுத்த நிலையில் தான் சுற்றுலா அல்லது பொருளாதார வளர்ச்சி இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.