
புத்ராஜெயா, செப்டம்பர் 18 – பயிற்சி பெற்ற வெளிநாட்டு தாதியர்களைப் பணியமர்ந்த ஏதுவாக, சுகாதார அமைச்சு தற்காலிகமாக நிபந்தனையுடன் கூடிய தளர்வை அறிவித்துள்ளது.
குறிப்பாக, இவ்வாண்டு அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி 12 மாதங்களுக்கு, தனியார் சுகாதார மையங்களுக்கு அந்த தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் துறைகளில் தாதியர்களின் பற்றாங்குறை, நாட்டில் சுகாதார சேவைகளை திறம்பட வழங்குவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவ்விவகாரம், கடந்த ஆண்டுகளாகவே முன் வைக்கப்பட்டு வருகிறது.
அதனால், அப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வுக் காணப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், பயிற்சி பெற்ற வெளிநாட்டு தாதியர்களை வேலைக்கு அமர்த்த ஏதுவாக நிபந்தனையுடன் கூடிய அந்த தற்காலிக தளர்வு வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.