Latestமலேசியா

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான முடக்கம் அகற்றப்பட்டது – டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், ஆக 17 – நாட்டில் வேலையில்லாதோர் விகிதம் குறைந்ததைத் தொடர்ந்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான முடக்கம் வெள்ளிக்கிழமை முதல் அகற்றப்பட்டதாக மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார். வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் முடிவு இதற்கு முன் நிறுத்தப்பட்டிருந்தபோதிலும் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அந்த முடிவு தற்போது மீட்டுக்கொள்ளப்பட்டடிருப்பதாக அவர் கூறினார். வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்களை அங்கீகரிப்து என தாம் முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சுமார்400,000 வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதற்காக இதற்கு முன் இணக்கம் காணப்பட்டதற்கு ஏற்ப அனைத்து விண்ணப்பங்களும் இம்மாத இறுதிக்குள் அங்கீகரிக்கப்படும் என சரவணன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!