கோலாலம்பூர், மார்ச் 7 – ஜோகூர் பாரு, Taman Pelanggi யில் இரண்டு இடங்களில் வெளிநாட்டு பெண்கள் நடத்திவந்த விபச்சார நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ Khairul Dzaimee Daud தெரிவித்தார்.
அந்த நடவடிக்கையின்போது 14 தாய்லாந்து பெண்கள், லாவோஸ் பெண் ஒருவர் மற்றும் மியன்மார் ஆடவர் ஒருவர் என மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த விலைமாதர்களின் வாடிக்கையானர்கள் என நம்பப்படும் இதர 12 பேரும் கைது செய்யப்பட்டதாக Khairul Dzaimee வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.