Latestமலேசியா

வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பதில் மலேசியா முதலீடு செய்ய வேண்டும் – திரேசா கோக் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 1- வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதிலும் அவற்றை மாணவர்கள் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதிலும் மலேசியா அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று Seputeh நாடாளுமன்ற உறுப்பினர் தெரெசா கோக் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டுவரும் இவ்வேளையில் தகவல் தொடர்பு மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கு பன்மொழித் திறன் முக்கியமானது என தெரெசா கோக் சுட்டிக்காட்டினார். உலகின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்று மலேசியா நீரிணையில் இருப்பதால், நமது அண்டை நாடுகளைப் போலவே நமது பணியாளர்களும் ஆங்கிலத்தைத் தவிர பிற வெளிநாட்டு மொழிகளிலும் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகிறது என அவர் தெரிவித்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்வார் பிரதமராக பதவியேற்றது முதல் , ஐக்கிய அரபு சிற்றரசு, அமெரிக்கா, சீனா மற்றும் பல நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட 17 பணி நிமித்த பயணங்களின் மூலம் 200 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளதாக தெரெசா கோக் குறிப்பிட்டார். இந்த அளவிலான முதலீடுகளுக்கு நிச்சயமாக உள்ளூர் மனிதவளம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூடுதல் வெளிநாட்டு மொழிகளைக் கற்க ஊக்குவிப்பதில் மலேசியா அதிக முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் தொழில் மற்றும் எதிர்கால வேலை முயற்சிகளுக்கு உதவ முடியும் என தெரெசா கோக் தெரிவித்தார். .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!