Latestமலேசியா

வெள்ளத்தால் கிளந்தானில் 14 சாலைகள் மூடப்பட்டன

கோத்தா பாரு, பிப்  27 –  வெள்ளத்தால் கிளந்தானில் 14 சாலைகள் அனைத்து வகை போக்குவரத்துக்கும் மூடப்பட்டுள்ளது.  பாசிர் மாஸ்,   தானா மேரா, குவாலா கிராய், பாசிர் பூத்தே , தும்பாட் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள்  வெள்ள நீரில் மூழ்கியிருப்பதாக,  பொதுப்பணித்துறையின் பேரிடர் நிர்வாக அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்டன், தானா மேரா பகுதியிலும், குவாலா கிராய் – மாச்சாங் எல்லைப் பகுதியிலும்  இரு நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன.
இதனிடையே, திரெங்கானு குவாலா பெசுட்டில் உள்ள  பெர்ஹெந்தியான் தீவில், மோசமான வானிலையால்  18 சிறார்கள், இரு குழந்தைகள் உட்பட   385 சுற்றுப் பயணிகள் சிக்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

வேகமான காற்றாலும், கடல் கொந்தளிப்பாலும்  அத்தீவுக்கான படகு சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக, அத்தீவின்  தங்குமிட சேவை சங்கத்தின் தலைவர்  அப்துல் அசிஸ் சே கூறியுள்ளார். அத்தீவில்  உள்ள  19 தங்கும் விடுதிகளிலும் உல்லாச விடுதிகளிலும்  தங்கியிருக்கும் சுற்றுப் பயணிகள்  திரெங்கானுவையும், வெளிமாநிலங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!