ஹுலு திரெங்கானு, மார்ச் 1 – ஹுலு திரெங்கானு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 233 SPM மாணவர்கள் 3 வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அந்த மாணவர்கள் நாளை தொடங்கும் SPM தேர்வை புதிய தேர்வு மையங்களில் எழுதுவார்கள் என Mahmudiah சமய இடைநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் தெரிவித்தார்.
முன்னதாக அம்மாவட்டத்தில் உள்ள இரு இடைநிலைப்பள்ளிகளின் மாணவர் தங்குமிடத்தில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் படகுகளின் வாயிலாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.