Latestமலேசியா

வெள்ளத்தில் சிக்கிப் பரிதவித்த மக்களை பாதியிலேயே விட்டுச் சென்றாரா அரசியல்வாதி?

அஜில், பிப் 28- உதவி உபத்திரமாகிய கதை போல, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நாயகன் என புகழாரம் சூட்டப்படுவதற்குப் பதிலாக சுயநலவாதி எனப் பெயர் பெற்றிருக்கின்றார் Ajil சட்டமன்ற உறுப்பினர் Maliaman Kassim.

முன்னதாக, Kampung Bukit Biahஇல் உள்ள மக்களுக்கு உதவுவதற்காக, மீட்புப் படையினருடன் Maliaman சென்ற டிரக் கவிழ்ந்ததும், அதன் பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட காட்சிகளும் நேற்று தொடங்கி சமூக வலைத்தளப் பக்கங்களை அலங்கரித்திருந்தன.

இந்நிலையில், தங்களைக் காப்பாற்ற மீட்புப் படையினர் வந்திருந்தபோது, உடன் வந்த மற்றவர்களைக் கைவிட்டுவிட்டு Maliaman முதலில் படகில் ஏறிச் சென்ற காட்சி ஒன்றைச் சுட்டிக்காட்டி, அவரின் செயலை வலைத்தளவாசிகள் பலரும் சாடிவருகின்றனர்.

மேலும், ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலில் உக்ரெய்ன் பிரதமர் Volodymyr Zelensky ராணுவ அணியுடன் களத்தில் இறங்கும் புகைப்படத்தையும் படகில் உள்ள Maliaman புகைப்படத்தையும் ஒப்பிட்டு சிலர் கருத்துகள் பதிவிட்டு எள்ளி நகையாடுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!