
ஷா அலாம், பிப் 2 – அண்மையில் ஷா அலாம் , பூச்சோங் மற்றும் கிள்ளான் கம்போங் ஜாவா வட்டாரத்தில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பி.பி.என் மாணவர் விடுதியின் முன்னாள் மாணவர்கள் சகக நல மேம்பாட்டு சங்கம் உதவி வழங்கியது. மலேசிய தமிழர் கலைமன்றத்தின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்ச்சியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமையல் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஷா அலாம் வட்டாரத்தைச் சேர்ந்த கலைஞர்கள் சிலருக்கும் உதவி பொருள் வழங்கப்பட்டது.
ஷா அலாம் தாமான் அலாம் மேகாவில் வெள்ள நிவாரண பொருட்களின் மையமாக செயல்பட்டுவரும் வீடு ஒற்றில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பி.பி.என் விடுதியின் முன்னாள் மாணவர்கள் சமூக நல மேம்பாட்டு சங்கத்தின் தலைவர் ராமசாமி , கருணா பூபதி, வழக்கறிஞர் மாணிக்கவாசகம், பத்துமலை , ரமணி கிருஷ்ணன் . மணிவாசகம் உட்பட மலாயா பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பயின்று பி.பி.என் மாணவர் விடுதியில் தங்கியிருந்த முன்னாள் மாணவர்கள் சமூக மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
தோட்டப்புறங்களிலிருந்து மலாயா பல்கலைக் கழகம் மற்றும் மலேசிய தேசிய பல்கலைகக்கழகத்தில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 1980 ஆம் ஆண்டுகளில் பெட்டாலிங் ஜெயாவில் தேசிய தோட்ட தொழிற்சங்கம் நடத்திவந்த பி.பி.என் மாணவர் விடுதி பெரும் உதவியாக திகழ்ந்து வந்தது. அதோடு அந்த விடுதியில் எஸ்.டி பிம் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புக்களும் நடைபெற்றது.
வெண்டோ அகடாமியில் எஸ்.டி.பி.எம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்த மாணவர்களுக்கும் பி.பிஎன் மாணவர் விடுதி அன்றைய காலக்கட்டத்தில் பெரும் உதவியாக இருந்ததை அந்த நிகழ்ழ்ச்சியில் கலந்துகொண்ட பி.பி.என் விடுதியின் முன்னாள் மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்துக்கொண்டனர்.
பி.பி.என் விடுதியில் தங்கி பயின்ற முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட சமூக நல சங்கம் இன்று சமூக மேம்பாட்டு பணிகளில் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவது குறித்து மகிழ்ச்சி அடைவதாக பி.பி.என் விடுதியின் முன்னாள் மாணவர்கள் சமூக நல சங்கத்தின் தலைவரான ராமசாமி தெரிவித்தார்.
அதே வேளையில் பி.பி.என் மாணவர் விடுதியின் முன்னாள் மாணவரான ரமணிகிருஷ்ணன் தாமான் ஆலாம் மெகாவிலுள்ள தமது வீட்டை வாடகை எதுவும் இன்றி கொடுத்து உதவியது நிவாரண பணிகள் சுமுகமாக நடைபெறுவதற்கு பெரும் பங்காற்றியதாக ராமாசாமி தெரிவித்தார். நிவாரணப் பொருட்களை எங்களது இயக்கத்திற்கு நன்கொடையாக வழங்கிய நல்ல உள்ளங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்த நிகழ்சியில் உரையாற்றிய ரமணி கிருஷ்ணன் பெரிய அளவில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவரும் பி.பி.என் மாணவர் விடுதியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முயற்சிக்கு தாமும் ஒரு வகையில் உதவியிருக்கிறேன் என்று நினைக்கும்போது மனம் மகிழச்யடைவதாக தெரிவித்தார். பி.பி.என் மாணவர் விடுதியில் தங்கியிருந்த சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பையும் இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியதாக அவர் கூறினார். பி.பி.என் மாணவர் விடுதியும் பல்கலைக்கழக வாழ்க்கையும் தமது வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நினைவுகள். பொது வாழ்க்கையில் மறக்க முடியாத இனிமையான நினைவுகள் என்றார்.
பி.பி.என் விடுதியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் முதல் முறையாக மேற்கொண்ட இந்த பணி தொடர வேண்டும் . இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட சமூக நல உதவித் திட்டங்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்வதற்கும் தயாராய் இருப்பதாக அரசியல் ஆய்வாளரான ரமணி கிருஷ்ணன் தெரிவித்தார். அதோடு மக்கள் திலகம் எம்.ஜி .ஆரின் பிறந்த நாள் நினைவு தினத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பது எம்.ஜிஆரின் அபிமானியான தமக்கு மகிழச்சியை அளிப்பதாகவும் ரமணி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உதவி வழங்கப்படுவது குறித்து மலேசிய தமிழர் கலைமன்றத்தின் தலைவர எம்.எஸ் மணியம் மற்றும அதன் செயலாளர் மணிவாசகம் நன்றி தெரிவித்துக்கொண்டார். நிகழ்சி நெறியாளராக பணியாற்றிய கலைஞர் ஆர்.எஸ் ராஜா அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் மக்களின் வாழக்கை புரட்டிப் போட்டதை தாம் கண்கூடாக கண்டதாக நினைவு கூர்ந்தார். வெள்ளப் பேரிடரின்போது உணவுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பிவைப்பதில் தம்முடன் இணைந்து செயல்பட்ட நண்பர்களுக்கும் அவர் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்த நிகழ்வில் டி.எம்.எஸ் ராஜா , பாலா , விஜயஸ்ரீ உட்பட பல கலைஞர்கள் பாடல்களை பாடி நிகழ்சிக்கு மேலும் மெருகூட்டினர்.