அபு தாபி, ஏப்ரல் 26 – துபாயில் அண்மையில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தில் சேதமுற்ற வீடுகளை மறுசீரமைக்க, ஐக்கிய அரபு சிற்றரசின் அமைச்சரவை 544 million அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்கியிருக்கிறது. வீடுகளின் சேதாரங்ளை மதிப்பிடவும் இழப்பீட்டுத் தொகையை விநியோகிக்கவும் அமைச்சர் நிலையிலான குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி மக்களின் இயல்பு வாழ்க்கை சீக்கிரமே வழக்கத்திற்குத் திரும்பும் என பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான Sheikh Mohammed bin Rashid Al Maktoum நம்பிக்கைத் தெரிவித்தார். கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல, அடைமழையில் நீர் நிலைகள் நிரம்பி வழிவதாகக் கூறிய அவர், இனி வரும் காலங்களில் இது போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தயார்நிலை வலுப்படுத்தப்படும் என்றார். 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி ஒரே நாளிர் ஐக்கிய அரபு சிற்றரசில் மழைக் கொட்டித் திர்த்தது. இதனால், உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் அனைத்துலக விமான நிலையம் வெள்ளக்காடாக காட்சியளித்து, விமானப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Articles
Check Also
Close