
ஜோகூர் பாரு, மார்ச் 9 – ஜோகூரில் ஏற்பட்டுள்ள வெள்ளம் சா ஆ வட்டாரத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ Ahmad Zahid Hamidi யின் இந்திய சமூகத்திற்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அர்விந்த் அப்பளசாமி சா ஆ வட்டாரத்திற்கு நேற்று வருகை புரிந்து அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கினார். அதோடு பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகனையும் அவர் கண்டறிந்தார்.
வெள்ளத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சா ஆ தமிழ்ப்பள்ளியையும் அவர் பார்வையிட்டார். அப்பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் பயில்வதால் அவர்கள் அனைவருக்கும் சீருடைகள் வழங்குவதற்கான ஏற்பாடு செய்வதற்கும் அர்விந்த் முன்வந்தார். பள்ளி திறந்தவுடன் மாணவர்களின் சீருடைக்கான அளவுகளை தெரிவிக்கும்படியும் அவர் பள்ளி தலைமையாசிரியரை கேட்டுக்கொண்டார்.