புத்ராஜெயா, பிப் 4 – மக்கட் தொகை அதிகமுள்ள சிலாங்கூர், ஷா ஆலாமில் , SMART எனப்படும் வெள்ள நீரை சேகரித்து முறையாக வழிந்தோட செய்யும் முறையுடன் கூடிய சுரங்கப் பாதையைக் கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நகர்ப் பகுதியில் வெள்ளப் பிரச்சனையை எதிர்கொள்ள, நீர்வள சுற்றுசூழல் துறை முன் வைத்திருக்கும் நீண்ட – குறுகிய கால திட்டங்களில் அந்த பரிந்துரை அடங்குமென பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
அதே வேளை, நேற்று கூட்டம் நடத்திய வெள்ளப் பேரிடர் நிர்வாக மையம், சீனாவில் உருவாக்கப்பட்ட Sponge City நகர் திட்டத்தை மேற்கொள்ளவும், நெதர்லாந்தைப் போன்று வெள்ள நீர் தடாகப் பகுதிகளை உருவாக்கவும் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் கூறினார்.