Latestமலேசியா

சட்டவிரோத அந்நியக் குடியேறிகளைத் தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் திட்டம் மார்ச் மாதம் அமல்

புத்ராஜெயா, பிப் 1 – சட்டவிரோத குடியேறிகள் மீது குற்றச்சாட்டு கொண்டு வராமல் அவர்களது தாயகத்திற்கு அனுப்பும் திட்டம் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கி செயல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தங்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப விரும்பும் ஆவணமற்ற குடியேறிகள் தாங்கள் புரிந்த குடிநுழைவுக் குற்றங்களுக்கான அபராதத்தைச் செலுத்தியப் பின்னர் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் நுழைவது, நிபந்தனைகளை மீறுவது மற்றும் அதிக காலம் தங்கியிருப்பது உட்பட ஒவ்வொரு குடிநுழைவு குற்றத்திற்கும் வெ.300 முதல் வெ.500 வரை அபராதம் விதிக்கப்படும் சைபுதீன் கூறினார். முதலாளிகள் தங்கள் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக ஆவணமற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்க வகை செய்யும் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்தை அரசாங்கம் முன்னதாக அமல்படுத்தியிருந்தது. இத்திட்டம் கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடைந்தது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான அனுமதி முடக்கம் குறித்து கருத்துரைத்த சைபுடின், விவசாயம், உற்பத்தி, கட்டுமானம், மற்றும் சேவைகள் (உணவகங்கள்) போன்ற முக்கியமான துறைகளுக்கு வெளிநாட்டு மனித ஆற்றல் போதுமானதாக இருப்பதால் அந்த முடக்கத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!