
மலாக்கா, ஜூன் 19 – ஜோகூரிலும், பகாங்கிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வறிய மற்றும் B40 குறைந்த வருவாய் பெறும் 1,000 குடும்பத்தினர், Payung Rahmah உதவித் திட்டத்தின் கீழ், 300 ரிங்கிட் பற்றுச் சீட்டைப் பெறுவார்கள்.
வெள்ளத்தால் சேதமடைந்த சலவை இயந்திரம், குளிர் சாதனப் பெட்டி போன்ற மின்னியல் சாதன பொருட்களை பொருட்களை வாங்க , அந்த பற்றுச் சீட்டு உதவியாக இருக்குமென உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவீனம் மீதான அமைச்சர் Datuk Seri Salahuddin Ayub தெரிவித்தார்.
அதோடு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு , கழிவு வழங்க மின்னியல் சாதன தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.