
வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி இரு நாட்களுக்கு, வாகனமோட்டிகள் இலவசமாக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தலாம்.
நாட்டிலுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் அந்த கட்டண விலக்கு அளிக்கப்படும்.
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அந்த சிறப்பு டோல் கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக, அமைச்சரவை கூட்டத்திற்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.