கோலாலம்பூர், நவ 28 – வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறையினருக்கு உணவு நேரத்திற்காக இரண்டு மணிநேரம் ஒதுக்குவதை பரிசீலிக்கும்படி ஜோகூர் அரசாங்கம கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில் மாநில அரசாங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த விவகாரம் எழுப்பப்பட்டதாக மனித வளங்ளுக்கான துணையமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் முகமட் தெரிவித்தார். அரசாங்கம் நிர்ணயித்துள்ள நடப்பு நடைமுறையை சிறந்த ஒன்றாக இருப்பதால் அதனை தொடர்ந்து பேணுவதற்கு அனைத்து தரப்பும் வெற்றியடையும் நோக்கத்தில் இந்த தீர்வு இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் ஏற்கனவே வேலைவாய்ப்புச் சட்டத்தில் (வேலைவாய்ப்புச் சட்டம் 1955, சட்டம் 265) இல் கோடிகாட்டப்பட்டுள்ளதால் அந்த சட்டத்தில் சிறிய திருத்தம் மட்டுமே தேவைப்படும். இது தொழிலாளர்களின் உரிமைகளை நாம் என்ன செய்ய முடியும் என்பதைச் சீராக்குவதற்கு மாநில அளவில் அரசாங்கத்தின் கொள்கையாகவும் இது இருக்கும் என அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.