
கோலாலம்பூர்,அக் 3 – கடந்த 30-ஆம் திகதி பூனைக்குட்டியின் மீது மனிதாபிமானமின்றி வெள்ளை சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இணையவாசிகளின் கடும் கண்டனத்தைப் பெற்றிருந்தது.
இதனிடையே காப்பாற்றப்பட்ட பூனை தற்போது சுத்தப் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அப்பூனைக்கு மூச்சு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் சிறிது பலவீனமாக இருப்பதாகவும் அதனை காப்பாற்றியவர் தெரிவித்து பதிவு ஒன்றையும் அப்பூனையின் படத்தையும் வெளியிட்டுள்ளார். அப்படத்தில் பூனை மிகச் நிர்வாக இருப்பதை காண முடிகிறது.
இந்த கோரச் செயலை செய்த கொடூரன் குறித்த விவரங்களை தகுந்த சாட்சியுடன் அடையாளம் காட்டுபவர்க்கு 3,000 ரிங்கிட் வெகுமதி வழங்க சமூக ஊடகத்தின் மூலம் மலேசியா பிராணிகள் குற்ற வெளிப்படைத்தன்மை (MyAct) அமைப்பு முன்வந்துள்ளது. அதே சமயத்தில் போலிஸ் தரப்பும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.