வாஷிங்டன், அக்டோபர்-8 – அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தின் போது, ஓர் ஆடவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டார்.
இதனால், அமைதியாகப் போய்க்கொண்டிருந்த போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும், உடனிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீப்புண் காயங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்தேதும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
‘பாலஸ்தீனத்தை விடுவியுங்கள்’ என்ற பதாகைகளை ஏந்திய அந்த அமைதி மறியலில் சுமார் 1,000 பேர் பங்கேற்றனர்.
இஸ்ரேலுக்கு ஆயுதத் தடையை விதிக்க வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் போர் தொடுத்து இந்த அக்டோபரோடு ஓராண்டு நிறைவடைகிறது; ஆனால் போர் தான் ஓய்ந்தபாடில்லை.