Latestமலேசியா

வெள்ள அபாயம்; KTMB MySawasdee இரயில் சேவைகள் இன்று முதல் டிசம்பர் 2 வரை இரத்து

ஆராவ், நவம்பர்-29, இன்று முதல் டிசம்பர் 2 வரை அட்டவணையிடப்பட்டிருந்த
KL Sentral – Hatyai இடையிலான KTMB நிறுவனத்தின் MySawasdee சிறப்பு இரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களிலும், தாய்லாந்தின் Hatyai-யிலும் அடைமழை தொடருவதாலும், இதனால் வெள்ள அபாயமிருப்பதாலும், அப்பயணச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக KTMB அறிக்கையொன்றில் விளக்கியது.

பயணம் இரத்தானதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, KTMB Mobile வாயிலாக முழுக் கட்டணமும் திருப்பித் தரப்படும்.

மேற்கொண்டு தகவல் அல்லது உதவித் தேவைப்படுவோர், இரயில் நிலையப் பணியாளர்களை அணுகலாம்.

அல்லது KTMB-யின் வாடிக்கையாளர் சேவை மையத்தை 03 9779 1200 என்ற தொலைப்பேசி எண்களிலும் callcenter@ktmb.com.my என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.

இதற்கு முன், வெள்ளம் மற்றும் நில அமிழ்வுச் சம்பவங்களால் கிழக்குக் கரைக்கான KTM Intercity இரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை வரைக்குமான தகவலின் படி, நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75,000 பேரைத் தாண்டியிருக்கிறது.

கிளந்தானில் மட்டுமே கிட்டத்தட்ட 60,000 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

திரங்கானுவில் 12,000 பேரும், கெடாவில் 2,200 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பெர்லிஸ், பேராக் ஆகிய மாநிலங்களிலும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!